புதுச்சேரி 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம்…!நேரடியாக நியமித்தது செல்லும் …!உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டில் திடீர் உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், முறையாக நியமனம் செய்யப்படவில்லை எனக் கூறி அந்த 3 பேரையும் சபாநாயகர் வைத்திலிங்கம் எம்எல்ஏக்களாக ஏற்க மறுத்தார்.
புதுச்சேரியில் மத்திய அரசு பாஜகவைச் சார்ந்த 3 பேரை தானாகவே நியமன எம்எல்ஏக்களாக நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமிநாராயணன் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்தது உச்சநீதி மன்றம் .அதில் புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும்.