[Image Credit: The Jakarta Post]
மத்திய அரசின் உணவு தரவரிசை பட்டியலில் 3ம் இடத்தை பிடித்தது தமிழ்நாடு.
சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி மத்திய அரசின் உணவு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, உணவு தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒவ்வொரு ஆண்டும் உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வை நடத்துகிறது. உணவுப் பாதுகாப்பின் ஆறு வெவ்வேறு அம்சங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை மதிப்பிடும் FSSAI ஆல் தயாரிக்கப்பட்ட ஐந்தாவது பட்டியல் இதுவாகும்.
அதன்படி, பெரிய மாநிலங்களில் 2022-23 மாநில உணவுப் பாதுகாப்பு பட்டியலில் கேரளா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு, 20 பெரிய மாநிலங்களில், முதலிடத்தில் கேரளா, பஞ்சாப் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 20 பெரிய மாநிலங்கள் பட்டியலில் உள்ளன.
சிறிய மாநிலங்களில் கோவா தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடத்தில் உள்ளது. கோவாவைத் தொடர்ந்து மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகியவை உள்ளன. கடந்த ஆண்டும் இந்த மூன்று மாநிலங்களும் இதே நிலையில்தான் இருந்தன. யூனியன் பிரதேசங்களில், ஜம்மு & காஷ்மீர், டெல்லி மற்றும் சண்டிகர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. ஜம்மு & காஷ்மீர் மூன்றாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மூன்று யூனியன் பிரதேசங்களும் கடந்த ஆண்டும் இதே நிலைகளைப் பெற்றிருந்தன.
இந்த உணவு தரவரிசை பட்டியல் ஆரோக்கியமான போட்டியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, நாடு முழுவதும் உள்ள உணவு பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கிறது. அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை வழங்குவதை உறுதி செய்கிறது.
அசுத்தமான உணவு மற்றும் நீரின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் விளைவுகள் குறித்து உலக கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 ஆம் தேதி (நேற்று) உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உணவு விஷத்தின் அபாயத்தைக் குறைப்பதற்கான வழியை மையமாகக் கொண்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு உணவின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…