அக்டோபர்-4 ஆம் தேதி நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை யு.பி.எஸ்.சி வெளியிட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை அண்மையில் யு.பி.எஸ்.சி மாற்றியது. புதிய அட்டவணையின்படி, இந்த தேர்வு வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அதில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இந்த தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
அந்த வகையில், அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டது.
அந்த அறிக்கையின் படி, தோ்வா்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக்கவசம் இல்லாத மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். தனிமனித இடைவெளி,போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தோ்வா்கள் தங்கள் சொந்த கை சுத்திகரிப்பானை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள் என ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டின் சிவில் சர்வீசஸ் தேர்வு மே- 31 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆணைக்குழு அக்டோபர்- 4 ஞாயிற்றுக்கிழமை சிவில் சர்வீசஸ் தேர்வை இந்தியா முழுவதும் நடத்தவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…