பொது போக்குவரத்து விரைவில் தொடங்கு – நிதின் கட்கரி
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்குவரத்துக்கு சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுடன் கூடிய புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதில், கட்டுப்பாடுகளுடன் தொழில்துறை துறைகளை இயக்க அனுமதித்தன மற்றும் முழுமையாக கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கவில்லை. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்குவரத்துக்கு சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பஸ் மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பின் காணொலிக்காட்சி மூலம் பேசிய கட்காரி, சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார். பேருந்துகள் மற்றும் கார்களை இயக்கும் போது சமூக தூரத்தை பராமரிப்பது மற்றும் கை கழுவுதல், சுத்திகரிப்பு மற்றும் முககவசம் போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றப்படும் என தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் பொது போக்குவரத்துக்கு மீண்டும் செயல்பட அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் போதிய விதிகளுடன் போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.