பொதுத்துறை பொதுக் காப்பீட்டு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் இன்று நிறைவேற்றம்..!

Default Image

பொதுத்துறை பொது காப்பீட்டு சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு இன்று நிறைவேற்றியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அமளிக்கிடையே,பொது காப்பீட்டு வர்த்தக திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். கடந்த முறை மத்திய பட்ஜெட்டில் நாட்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.அதன்படி, ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தை, தனியார் மயமாக்குவது தொடர்பான சட்ட திருத்த மசோதா, தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அவர் கூறுகையில்:”2021-22 ஆம் ஆண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்க நாங்கள் முன்மொழிகிறோம். இதற்கு சட்ட திருத்தங்கள் தேவைப்படும்”,என்று கூறினார்.

இதனால்,பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் அதிக தனியார் பங்களிப்பை வழங்குதல், காப்பீடு ஊடுருவல் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துதல், பாலிசிதாரர்களின் நலன்களை சிறப்பாகப் பாதுகாத்தல் மற்றும் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு பங்களித்தல், சட்டத்தின் சில விதிகளைத் திருத்துவது மசோதாவில் அவசியமாகிவிட்டது.

இந்நிலையில்,அரசுக்குச் சொந்தமான காப்பீட்டாளர்களில்,அரசு தனது பங்குகளைப் பெற அனுமதிக்கும் வகையில் பொதுக் காப்பீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் இன்று நிறைவேற்றியது.

அதன்படி,பொது காப்பீட்டு வர்த்தக (தேசியமயமாக்கல்) திருத்த மசோதா 2021,இந்திய சந்தைகளில் இருந்து தேவையான ஆதாரங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் பொதுத்துறை பொது காப்பீட்டாளர்கள் புதுமையான தயாரிப்புகளை வடிவமைக்க முடியும்.

மேலும்,மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனத்தில் ஈக்விட்டி மூலதனத்தில் 51 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது என்ற தேவைகளை அகற்ற முற்படுகிறது.

இன்றுவரை,பொதுத் துறையில் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உள்ளிட்ட நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இப்போது, இவற்றில் ஒன்று தனியார் மயமாக்கப்படும்,ஆனால்,மத்திய அரசு அதன் இன்னும் பெயரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்