நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.! பொதுமக்கள் அவதி.!

Default Image
  • நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் வங்கிச் சேவைகள் திங்கட்கிழமை வரை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
  • எங்களது கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லையென்றால் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என அறிவித்து உள்ளோம் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் வங்கிச் சேவைகள் திங்கட்கிழமை வரை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், ஒன்பது தொழிற்சங்கங்களை உள்ளடத்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான UFBU ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதனால் எஸ்.பி.ஐ மற்றும் ஐடிபிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் சேவை இன்றும் நாளையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஊதிய உயர்வு தொடர்பான வங்கி நிர்வாகத்தினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் செயல்பட வேண்டும். 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை ஏற்க வங்கிகள் நிர்வாகம் மறுத்துவிட்டன. இதனால் வாங்கி ஊழியர்கள் இதனை வலியுறுத்தி இன்று, நாளை ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் பேட்டியளித்த போது வங்கி துறையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். கோரிக்கைகளை தந்து 30 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முடிவும் ஏற்படவில்லை, விலைவாசிகளும் உயர்ந்துள்ளது, வேலை பளு அதிகமாக உள்ளது.

மேலும், அதற்கு தகுந்தவாறு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரினோம். ஆனால் 12 சதவீதம் மட்டுமே உயர்த்தப்படும் என்றனர். இதனால் போராட்டத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை மக்கள் புரிந்து கொண்டு நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தர வேண்டும். நிர்வாகம் கோரிக்கையை ஏற்றால் போராட்டத்தை கைவிட தயாராக இருக்கிறோம் என்றும், 2 நாள் போராட்டத்திற்கு பின் நிர்வாகம் வரவில்லை என்றால் மார்ச் மாதம் 11, 12,13 ஆகிய 3 நாள் போராட்டம் நடத்தப்படும். அதிலும் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என அறிவித்து உள்ளோம் என்று தெரிவித்தார். வங்கிகளில் வேலை நிறுத்தினால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்