குட் நீயூஸ்..!கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை கடன் -பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு…!

Default Image

கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை தனிநபர்கடன் வழங்குவதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையானது தீவிரமடைந்த நிலையில்,கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான பண வசதி இல்லாமல் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால்,மக்களை தொற்றில் இருந்து மீள வைப்பதற்காக,பொதுத்துறை வங்கிகள் கடன் திட்டத்தை அறிவித்துள்ளன.

அதன்படி,நாட்டின் பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ,கனரா,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை பிணையற்ற கடன்களை(ஜாமீன் அல்லது சொத்து இல்லாவிட்டாலும்)
வழங்க தயாராக உள்ளதாகவும்,மேலும் 5 ஆண்டுகளில் இக்கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் தருவதாகவும் தெரிவித்துள்ளன.

அவ்வாறு வழங்கப்படும் கடன் தொகைக்கு,எஸ்பிஐ வங்கியானது ஆண்டுக்கு 8.5% வட்டி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.ஆனால்,மற்ற வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தை தீர்மானிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து,கொரோனா சிகிச்சை மையங்கள்,ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் உற்பத்தியாளர்கள்,பரிசோதனைக் கூடங்கள்,தடுப்பூசி இறக்குமதியாளர்கள் போன்றோர்களுக்கும் கடன் உதவி வழங்கப்படும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்