கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு.!
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, அங்கு அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை பொதுமுடக்கம் விதிகளை நீடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,429 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கேரளாவில் கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் நடவடிக்கையாக, அங்கு ஜூலை 2021 வரை பொதுமுடக்க விதிமுறைகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒரு அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணையில் சில விதிமுறைகளை விதித்துள்ளது.அதில்,
- பொது இடங்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, 6 அடி தூரம் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
- யாரும் ஒரே இடத்தில் கூடக்கூடாது, அரசு அனுமதி பெறாமல் தர்ணா, போராட்டம், போன்றவை நடத்த கூடாது.
- பொதுநிகழ்ச்சிகளில் 10 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல், மற்றும் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
- திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி கிடையாது. அவ்வாறு பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
- மேலும், சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவேண்டும். அதுமட்டுமின்றி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வரும் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்க வேண்டும்.
- இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது எனவும், கொரோனாவால் உயிரிழந்தவருக்கு அரசு வகுத்த சிறப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
- கொரோனா உள்ளதாக என சந்தேகப்படும் நபர் உயிரிழந்தாலோ, அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு, கொரோனாவால் உயிரிழந்தவருக்கு மேற்கொள்ளும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
- வணிக வளங்களில் ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது எனவும், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும். மேலும், வாடிக்கையாளருக்கு கடை உரிமையாளர் கிருமிநாசினி வழங்க வேண்டும்.
- பொது இடங்கள், சாலைகள், நடைபாதைகளில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.