Categories: இந்தியா

பொதுமக்கள் கவனத்திற்கு..! ஏப்ரல் மாத வங்கி விடுமுறை தினங்களின் பட்டியல் இதோ…

Published by
Muthu Kumar

ஏப்ரல் 2023 மாதத்தில் வங்கிகள் (விடுமுறை)மூடப்பட்டிருக்கும் நாட்களின் முழுமையான பட்டியலைப் பார்க்கலாம்…

இந்தியாவில் ஒரு புதிய நிதியாண்டின் ஆரம்பமான ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமானது. 2023-24 நிதியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் ஏப்ரல் மாதம் ஏராளமான வங்கி விடுமுறைகளால் நிரம்பியுள்ளது, இதனால் பொதுமக்கள் ஏப்ரல் மாதத்தில் வங்கி விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்துவிட்டு வங்கிப்பணிகளுக்கு திட்டமிடுவது அவசியம்.

வங்கிகள் மூடப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிடுகிறது. ஏப்ரல் மாதத்தில் பல பண்டிகைகள், பிறந்தநாள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட மொத்தம் 15 வங்கி விடுமுறைகள் உள்ளன.

ஏப்ரல் 2023 வங்கி விடுமுறை பட்டியல் பின்வருமாறு:

  • ஏப்ரல் (2,9,16,23,30) 2023 – ஆகிய 5 தினங்களும், நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
  • ஏப்ரல் 1, 2023 – முழு நிதியாண்டு மூடல் காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.(ஐஸ்வால், ஷில்லாங், சிம்லா மற்றும் சண்டிகர் தவிர)
  • ஏப்ரல் 4, 2023 – மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • ஏப்ரல் 5, 2023 – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் வங்கிகள் மூடப்படும்.

  • ஏப்ரல் 7, 2023 – புனித வெள்ளி நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். (அகர்தலா, அகமதாபாத், குவஹாத்தி, ஜெய்ப்பூர், ஜம்மு, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் தவிர)
  • ஏப்ரல் 8, 2023 – இரண்டாவது சனிக்கிழமை, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
  • ஏப்ரல் 14, 2023 – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.( ஐஸ்வால், போபால், புது தில்லி, ராய்ப்பூர், ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர)
  • ஏப்ரல் 15, 2023 – விஷு, போஹாக் பிஹு, ஹிமாச்சல் தினம் மற்றும் பெங்காலி புத்தாண்டு காரணமாக அகர்தலா, கவுகாத்தி, கொச்சி, கொல்கத்தா, சிம்லா மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.
  • ஏப்ரல் 18, 2023 – ஷப்-இ-கதர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்.
  • ஏப்ரல் 21, 2023 – ஈத்-உல்-பித்ர் காரணமாக அகர்தலா, ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.
  • ஏப்ரல் 22, 2023 – ஈத் மற்றும் நான்காவது சனிக்கிழமை காரணமாக பல இடங்களில் வங்கிகள் மூடப்படும்.

இந்த வங்கி விடுமுறை நாட்களில் பெரும்பாலான வங்கிகள் மூடப்படும் என்றாலும், ஆன்லைன் வசதிகள் மற்றும் ஏடிஎம்கள் செயல்படும், மேலும் UPI மூலம் பணம் செலுத்தலாம்.

Published by
Muthu Kumar

Recent Posts

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…

6 hours ago

பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்… ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்…

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…

7 hours ago

நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!

நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…

9 hours ago

அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…

9 hours ago

ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!

சென்னை :  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…

9 hours ago

இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!

சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…

9 hours ago