இந்தியா

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு..! ரிசர்வ் வங்கி கூறிய முழு விவரம் இதோ…

Published by
லீனா

கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஓர் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

பொதுமக்கள் கையிறுப்பில் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும். அதனை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் (இன்று) வங்கிகளில் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

20000 ரூபாய் (10 எண்ணம் உள்ள 2000 நோட்டுகள்) வரையில் வங்கியில் கொடுத்து, வங்கி விதிப்படி அடையாள விவரங்களை தெரிவித்து பணமாக பெற்று கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் இருந்தால் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இதனை தொடர்ந்து நேற்று, நேற்று முன்தினம் என பெட்ரோல் பங்குகள், போக்குவரத்து கழகம் என பல்வேறு நுகர்வோர் துறைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வெளியாகின. அறநிலையத்துறையினர், அனைத்து கோவில் உண்டியல் காணிக்கையும் எண்ணப்பட்டு 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அதன்படி, அக்.7 ஆம் தேதி வரை ரூ.2000 தாள்களை மாற்றலாம் என உத்தரவிட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளில் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. நாட்டில் புழக்கத்திலிருந்த 96 சதவிகித 2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே மதம் 19ஆம் தேதி , 2000 ரூபாய் நோட்டுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்னர் 3.56 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. தற்போது செப்டம்பர் 29 வரையில் 3.42 லட்சம் கோடி ரூபாய் 2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு விட்டன.

96 சதவீதம் அளவில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டன. இன்னும் 0.14 லட்சம் கோடி வரையில் மட்டுமே இன்னும் வரவேண்டியுள்ளது. இதனால் பல்வேறு நிர்வாக காரணங்கள் கருத்தில் கொண்டு கால அவகாசம் அக்டோபர் 7 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 8 முதல் இந்தியாவில் உள்ள 19 ரிசர்வ் வங்கி கிளைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான கூடுதல் அறிவிப்புகளாக…

  • அக்டோபர் 8 முதல் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் வாங்கப்பட மாட்டாது.
  • ரிசர்வ் வங்கி கிளைகளில் 20000 ரூபாய் மதிப்பீடு வரையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
  • மாற்றப்படும் ரூபாய் நோட்டுகள் பயனாளரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
  • நேரில் வர முடியாதவர்கள் அரசு தபால் மூலம் அனுப்பலாம். அதில் உங்கள் அடையாள அட்டை நகல் ஏதேனும் இருக்க வேண்டும். வங்கி விவரங்களையும் அனுப்ப வேண்டும்.
  • ஏதேனும் விசாரணை தேவைப்பட்டால், நீதிமன்ற விசாரணை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அரசு துறை சார்பாக யார் வேண்டுமானலும் உங்களை விசாரிக்க முழு அதிகாரம் உண்டு.

ஆகிய அறிவிப்புகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஐபிஎல் ஏலத்தில் ஷாக்கிங் டிவிஸ்ட்..! விற்கப்படாத 3 முக்கிய வீரர்கள்!

ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…

2 minutes ago

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…

20 minutes ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

53 minutes ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

1 hour ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

2 hours ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

3 hours ago