முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பொதுமக்கள் நாளை 11:00 முதல் 12:30 மணி வரை சிடிஎஸ் கராஜ் மார்க் இல்லத்தில் அஞ்சலி செலுத்தலாம்.
நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து, அதனை தொடர்ந்து, சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ சிறப்பு விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் அனுப்பப்பட்டது.
இரவு 8 மணியளவில் டெல்லிக்கு 13 பேரின் உடல்களும் வரவுள்ளது. இந்நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பொதுமக்கள் நாளை 11:00 முதல் 12:30 மணி வரை சிடிஎஸ் கராஜ் மார்க் இல்லத்தில் அஞ்சலி செலுத்தலாம். இராணுவ வீரர்கள் 12:30-01:30 மணி நேரங்களுக்கு இடையில் மரியாதை செலுத்தலாம்.
அதன்பிறகு, டெல்லி கான்ட் பிரார் சதுக்கத்தில் இறுதிச் சடங்கிற்காக துப்பாக்கி வண்டியில் சடலம் எடுத்துச் செல்லப்படும் எனவும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் காலமான பிரிக் எல்எஸ் லிடரின் இறுதிச் சடங்குகள் நாளை தில்லி கான்ட் மைதானத்தில் 09:15 மணி அளவில் நடைபெறும் என இந்திய இராணுவம் தரப்பில் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…