பிபின் ராவத்துக்கு பொதுமக்கள் நாளை 11 மணிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி..!

Default Image

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பொதுமக்கள் நாளை 11:00 முதல் 12:30 மணி வரை சிடிஎஸ் கராஜ் மார்க் இல்லத்தில் அஞ்சலி செலுத்தலாம்.

நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது.  இதைத்தொடர்ந்து, அதனை தொடர்ந்து, சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து  இராணுவ சிறப்பு விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் அனுப்பப்பட்டது.

இரவு 8 மணியளவில் டெல்லிக்கு 13 பேரின் உடல்களும் வரவுள்ளது. இந்நிலையில்,  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பொதுமக்கள் நாளை 11:00 முதல் 12:30 மணி வரை சிடிஎஸ் கராஜ் மார்க் இல்லத்தில் அஞ்சலி செலுத்தலாம். இராணுவ வீரர்கள் 12:30-01:30 மணி நேரங்களுக்கு இடையில் மரியாதை செலுத்தலாம்.

அதன்பிறகு, டெல்லி கான்ட் பிரார் சதுக்கத்தில் இறுதிச் சடங்கிற்காக துப்பாக்கி வண்டியில் சடலம் எடுத்துச் செல்லப்படும் எனவும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் காலமான பிரிக் எல்எஸ் லிடரின் இறுதிச் சடங்குகள் நாளை தில்லி கான்ட் மைதானத்தில் 09:15 மணி அளவில் நடைபெறும் என இந்திய இராணுவம் தரப்பில் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்