பப்ஜி செயலியின் பங்குகளை தென் கொரியா நிறுவனம் வாங்கவுள்ள நிலையில், இந்தியாவில் மீண்டும் பப்ஜி கேம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.
இதனையடுத்து, டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்த நிலையில், பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதில் இளைஞர்கள் அதிகளவில் விளையாடும் கேம், பப்ஜி. இந்த பப்ஜி செயலியை 175 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தனர். இந்த பப்ஜி செயலிக்கும் மத்திய மத்திய அரசு தடை விதித்து, அதனை கூகுள் பிளே ஸ்டார் மற்றும் ios ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.
மேலும் பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி லைட் செயலிகள் தடை காரணமாக, அந்நிறுவனத்திற்கு பல கோடி ருபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஆயினும், பலரின் மொபைலில் இந்த செயலிகள் இருப்பதால், அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பப்ஜி நிறுவனத்தின் பங்குகளை டென்சென்ட் நிறுவனத்திடம் இருந்து தென் கொரிய நிறுவனம் ஒன்றிற்கு பப்ஜியின் பங்குகளை விற்கவுள்ளது. மேலும், தென் கொரிய செயலிகளை தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பில்லாத நிலையில், பப்ஜி இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதன்மூலம் இந்தியாவில் விரைவில் பப்ஜி கேம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…