பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி செயலி நீக்கம்!
பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி லைட் செயலிகளை கூகுள் பிளே ஸ்டார் மற்றும் ios ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.
இதனையடுத்து, டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்த நிலையில், பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதில் இளைஞர்கள் அதிகளவில் விளையாடும் கேம், பப்ஜி. இந்த பப்ஜி செயலியை 175 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தனர். இந்த பப்ஜி செயலிக்கும் மத்திய மத்திய அரசு தடை விதித்த நிலையில், தற்பொழுது பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி லைட் செயலிகளை கூகுள் பிளே ஸ்டார் மற்றும் ios ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.
மேலும், ஏற்கனவே பப்ஜி செயலியை பதிவிறக்கம் செய்தவர்கள், அதன் சர்வரை மத்திய அரசு நிறுத்தும் வரை விளையாடலாம். ஆனால், அந்த செயலியை அப்டேட் செய்ய முடியாது எனவும் கூறப்படுகிறது.