மாநிலங்களவை நியமன எம்பியாக பி.டி.உஷா இன்று பதவியேற்றார்
மாநிலங்களவை நியமன எம்பியாக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா இன்று பதவியேற்றார்.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இன்று பதவியேற்றுள்ளார்.பி.டி.உஷா 1980ல் தடகள போட்டிகளில் மிக பெரிய சாதனையை படைத்தவர்.
1985ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்க பதக்கங்களையும், ஒரு வெண்கலமும் வென்று யாராலும் முறியடிக்க முடியாத சாதனை படைத்தவர்.
கடந்த பல ஆண்டுகளாக தடகள வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார்.