#Breaking : வெற்றிகரகமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்.!
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி ராக்கெட்.
இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி54 ரக ராக்கெட் இன்று 11.58க்கு விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டது. இதற்கான 25.30 மணிநேர கவுண்டவுன் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டது.
இந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டில் 960 கிலோ எடை கொண்ட இந்தியாவின் ஓசோன்சாட்-3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. ஓசோன்சாட் வரிசையில் விண்ணில் ஏவப்படும் 4வது செயற்கைகோள் ஆகும். இந்த செயற்கைகோள் மூலம், கடலின் நிறம் , மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நடைபெறும் ஒளியியல் மாற்றங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன.
இதில் ஓசோன்சாட்-3 ரக செயற்கை கோளுடன், அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட் 4 செயற்கை கோள்களும், இந்தியா பூடான் கூட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் 2பி செயற்கைகோள், துருவா ஸ்பேஸ் நிறுனத்தின் தைபோல்ட் 2 செயற்கை கோள்கள், பிக்சலின் ஆனந்த் செயற்கை கொள் உள்ளிட்ட 8 நானோ செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.