வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி60’ ராக்கெட்!

பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் சுமந்து செல்லும் 2 செயற்கைக்கோள்களும் பூமியில் இருந்து 476 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.

PSLVC60 ISRO PSLV

ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் ‘பிஎஸ்எல்வி சி60’ ரக ராக்கெட் வெற்றி கரமாக ஏவப்பட்டது.

செயற்கைகோள் இணைப்பு சோதனைக்காக (Space Docking Experiment) SDX01 மற்றும் SDX02 எனும் இரு செயற்கைக்கோளை இந்த ‘பிஎஸ்எல்வி சி60’ ராக்கெட் சுமந்து செல்கிறது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.

இணைப்பு சோதனை என்பது, விண்வெளியில் இருக்கும் ஒரு செயற்கைகொளுடன் இன்னொரு செயற்கைகோளை இணைக்கும் செயல்முறையாகும். இதன் மூலம் இந்த செயற் கோளில் உள்ளவர்களை அங்கு அனுப்பவும் முடியும். அங்கு இருப்பவர்களை இங்கு அழைத்து வரவும் முடியும்.

முன்னதாக, இன்று (டிச,30) இரவு 9:58 மணிக்கு ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சில காரணங்களால் இன்று இரவு 9.58 மணிக்கு பதிலாக, இரவு 10 மணி 15 வினாடிகளுக்கு விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ‘பிஎஸ்எல்வி சி60’ ரக ராக்கெட் வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ஏவுதல் வெற்றி பெற்றால், விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் திறன் கொண்ட நான்காவது நாடாக இந்தியா வரலாறு படைக்கும். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இந்த அரிய பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு செயற்கைக்கோளும் தலா 220 கிலோ எடை கொண்டதாகும். SDX01 செயற்கைகோள் துரத்தும் செயற்கைகோளாகவும், SDX02 டார்கெட் செயற்கைகோளாகவும் உள்ளது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பூமியில் இருந்து 476 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, புவியின் வட்டப்பாதையில் பயணிக்கும்.

விண்ணில் 20 கிமீ தூரத்தில் வெவ்வேறு திசையில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைகோள்கள் அடுத்த 10 நாட்களில் இணைப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைக்கப்பட்ட பிறகு, இரண்டு செயற்கைக்கோள்களும் இரண்டு ஆண்டுகளுக்கு பூமியைச் சுற்றி வரும் என கூறப்படுகிறது.

SDX01 உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராவைக் கொண்டுள்ளது. இது அங்கிருப்பவையை மிகவும் தெளிவாக  படம்பிடிக்க எடுக்கும் உதவும். SDX02 இரண்டு சிறப்பு தொழில்நுட்ப சாதனங்களை கொண்டுள்ளது. அவை தாவரங்களைப் பற்றி அறியவும், இயற்கை வளங்களைக் கண்டறியவும், கதிர்வீச்சு அளவை அளவிடவும் பயன்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்