Categories: இந்தியா

PSLV-C55: 750 கிலோ எடை.. சிங்கப்பூர் செயற்கைக்கோளை ஏப்.22ம் தேதி விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ!

Published by
பாலா கலியமூர்த்தி

சிங்கப்பூரின் 750 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை பிஎஸ்எல்விசி-55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது அடுத்த பெரிய பணிக்காக வாடிக்கையாளர் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது. இந்தியாவுக்கு தேவையான தகவல் தொடர்பு, வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தி வருகிறது.

வணிகரீதியான செயற்கைகோள்:

இத்துடன், வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ). அந்தவகையில், சிங்கபூருக்குச் சொந்தமான 750 கிலோ எடை கொண்ட டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது.

டெலியோஸ்-2:

சிங்கப்பூரின் டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் 24 மணிநேரமும், அனைத்து வானிலை குறித்த படங்களையும் படம்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ST இன்ஜினியரிங் உருவாக்கிய 750 கிலோகிராம் செயற்கைக்கோள், ஹாட்ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் மூடுபனி மேலாண்மை, விமான விபத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பலவற்றிற்குப் பயன்படுத்தக்கூடிய படங்களை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோ அறிவிப்பு:

அதன்படி, சிங்கப்பூரின் 750 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை பிஎஸ்எல்விசி-55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.  அதுவும், இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் 750 கிலோ எடை கொண்ட டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வரும் ஏப்.,22ம் தேதி மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

3 minutes ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

21 minutes ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

1 hour ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

1 hour ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

2 hours ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

2 hours ago