தொடங்கியது கவுண்டவுன்.. 19 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி51!
பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது, பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட். அதற்கான கவுண்ட்வுன் தொடங்கியது.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்கிறது, பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட். இதற்கான 25 மணிநேர கவுண்டவுன், இன்று காலை 8.54 மணிக்குத் தொடங்கியது. மேலும் இந்த ராக்கெட், 2021 ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பும் முதல் ராக்கெட்டாகும்.
இந்த ராக்கெட்டில் ஏவப்படும் அனைத்து செயற்கைக் கோள்களும் சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்த ராக்கெட்டில் பிரேசில் நாட்டின் அமேசானியா-1 மிஷன் செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ, விண்ணுக்கு செலுத்தவுள்ளது. இந்த அமேசானியா, 637 கிலோ எடை கொண்டதாகும். அதன் ஆயுள் காலம் 4 ஆண்டுகள் என்றும், இந்த செயற்கைகோள் பிரேசில் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டதாகும்.
இதில் அமேசானியா செயற்கைக்கோள் மட்டுமின்றி, இஸ்ரோவின் ஸ்பேஸ் புரமோஷன் அண்ட் ஆத்தரஷேசன் சார்பில் 4 செயற்கோளும், சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் எஸ்டி சாட் கோள்கள், என்எஸ்ஐஎல் அமைப்பு சார்பாக 14 செயற்கைக்கோள்கழும் விண்ணில் பாயவுள்ளது, குறிப்பிடத்தக்கது.