இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்..!
சிங்கப்பூரின் இரண்டு செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டை இன்று மதியம் 2.19 மணி அளவில் விண்ணில் செலுத்துகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சிங்கப்பூரின் இரண்டு செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டை இன்று மதியம் 2.19 மணி அளவில் விண்ணில் செலுத்துகிறது.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி 30 நிமிட கவுண்ட்டவுன் நேற்று பகல் 12.49 மணிக்கு தொடங்கியது. பி.எஸ்.எல்.வி 4 (சி55) ராக்கெட் மாதிரியுடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி மலைக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு, நேற்று காலை கோவிலுக்குச் சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டனர்.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி 4 (சி.55) ராக்கெட், சிங்கப்பூரை சேர்ந்த ‘டெலியோஸ் – 02’ செயற்கைக்கோளை சுமந்தபடி இன்று பிற்பகல் 2:19 மணிக்கு விண்ணில் ஏவப்படும் நிலையில், இந்த செயற்கைகோள், புவி கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கு பயன்படக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகரீதியாக செலுத்தப்படும் சிங்கப்பூரின் டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் 24 மணிநேரமும், அனைத்து வானிலை குறித்த படங்களையும் படம்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ST இன்ஜினியரிங் உருவாக்கிய 741 கிலோகிராம் செயற்கைக்கோள், ஹாட்ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் மூடுபனி மேலாண்மை, விமான விபத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பலவற்றிற்குப் பயன்படுத்தக்கூடிய படங்களை வழங்கும் திறன் கொண்டது ஆகும்