ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி- சி48 என்ற ராக்கெட்டை, நாளை அதாவது டிசம்பர் 11 அன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல்,தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது. தற்போது,இந்திய எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்க்கொள்வதற்க்காக, 628 கிலோ எடை கொண்ட ‘ரிசாட் – 2 பி.ஆர்.,1’ என்ற, அதிநவீன செயற்கை கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இது முதல் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – சி48ராக்கெட், நாளை மதியம், 3:25 மணிக்கு விண்ணில் பாய்கிறது.இதில், ‘ரிசாட் -2 பி.ஆர்., 1’ செயற்கைகோளுடன், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய ஒவ்வொரு நாடுகளின்,ஒரு செயற்கைகோளும் ஐக்கிய அமெரிக்காவின் ஆறு செயற்கை கோள்களும், வணிக ரீதியில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.இந்த் பயணம் பிஎஸ்எல்வி யின் ஐம்பதாவது பயணம் ஆகும்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…