628 கிலோ எடை கொண்ட பி.எஸ்.எல்.வி சி48..!விண்ணை கிழிக்க ரெடி..!கவுண்ட்டன் ஸ்டார்ட்..!
- 628 கிலோ எடை கொண்ட பி.எஸ்.எல்.வி சி48 நாளை விண்ணில் பாய்கிறது.
- இதற்கான கவுண்ட்டன் தொடங்கியுள்ளது.
பூமியை கண்காணிக்க ரீசார்ட்-2பி ஆர்1 எனப்படும் செயற்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதனை பி.எஸ்.எல்.வி சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 3.45 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை அடுத்து.அதற்கான கவுண்ட்டன் இன்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது.628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் சுமார் 5 ஆண்டுகளுக்கு இதன் பணியை விண்ணில் செய்ய உள்ளது.
மேலும் இது மட்டுமல்லாமல் இஸ்ரேல்,ஜப்பான்,இத்தாலி ஆகிய நாடுகளின் தலா 1 செயற்கைக்கோளையும்,அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள் என்று வணிக ரீதியாக 9 செயற்கைக்கோள்களையும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணில் அனுப்புகிறது.
மேலும் பி.எஸ்.எல்.வி சி48 விண்ணில் ஏவப்படுவதை நேரில் ஸ்ரீகரிகோட்டாவில் இருந்து பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.இதற்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ஆன்-லைன் முகவரியில் பதிவு செய்யலாம்.