பி.எஸ்-4 வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும்-நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும். ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு பலன்கள் அப்படியே மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாகன, வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தோடு இணைத்து EMI-களை குறைக்க வேண்டும்.
2020 மார்ச் 31க்கு முன் வாங்கப்படும் பி.எஸ்-4 வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் .பழைய வாகனங்களை ஒழிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.