6 மாதத்திற்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்- சோனியா காந்தி
ஏழை ,எளிய மக்களுக்கு மாதம்தோறும் 10 கிலோ உணவு தானியங்களை 6 மாதத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,வருகின்ற செப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை,எளிய மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதந்தோறும் 10 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தற்போது உணவு பொருட்களின் விலை உயர்ந்து உள்ளதால் இந்த நடவடிக்கை மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.