புதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை

புதுச்சேரியில் நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் ஆகும். இந்த நிலையில் புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ந்தேதி கூடுகிறது என்று சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.வருகின்ற 28-ந்தேதி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதுச்சேரியில் நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை பெரியகடை காவல் எல்லைக்குள் அனுமதியின்றி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025