‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை ! தட்டுகளை தட்டி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டுகளைத் தட்டி சத்தம் எழுப்பினார்கள்.
பிரதர் மோடி முதல் முறையாக பிரதமராக கடந்த 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்ற “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியை தொடங்கப்பட்டது.அதாவது அகில இந்திய வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.ஆகவே 2019-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் நேற்று அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார். இந்நிலையில் பிரதமர் மோடி “மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள், தட்டுகளைத் தட்டி சத்தம் எழுப்பினார்கள்.மேலும் ,அரசுக்கு எதிராக கோஷமிட்டும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.