டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் உண்மையான விவசாயிகளே கிடையாது, அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என பாஜக எம்.பி அக்ஷய்வர் லால் கோண்ட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விமர்சித்த உத்தரபிரதேச மாநிலம் பரைச் தொகுதி பாஜக எம்பி அக்ஷய்வர் லால் கோண்ட் அவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவது விவசாயிகள் அல்ல, அவர்கள் சீக்கியர்கள் மற்றும் பாகிஸ்தானால் தூண்டப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார்.
மேலும் இவர்கள் உண்மையான விவசாயிகளாக இருந்தால் நாட்டில் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை சந்தைக்கு வந்திருக்காது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும். ஆனால் இவர்கள் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கி போராட்டம் நடத்தக் கூடிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். மேலும் போராட்டம் நடத்தக் கூடிய பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் ஒரு கொள்ளைக்காரன் எனவும் தெரிவித்துள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…