டெல்லி ஷாஹீன்பாக் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு.!
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டெல்லி ஷாஹீன்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு மாதத்திற்க்கு மேல் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்கவேண்டும் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.அதன் பேரில் இன்று காலை சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் ஷாஹீன்பாக் போராட்ட களம் அருகே சில மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.அந்த மர்மநபர்களை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.