பாட்னாவில் நடந்த போராட்டம்; போலீசார் நடத்திய தடியடியில் பாஜக தொண்டர் உயிரிழப்பு.!

Bihar Patna lathi

பாட்னாவில் நடந்த போராட்டத்திற்கு மத்தியில் போலீசார் தடியடி நடத்தியதில் பாஜக தொண்டர் கொல்லப்பட்டார். 

பீகார் மாநிலத்தில் ஆசிரியர்களை பணியமர்த்துவது தொடர்பான விஷயத்தில், பீகார் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னாவில் சட்டசபையை நோக்கி போராட்டம் நடத்தி பேரணியாக சென்ற பாஜகவை சேர்ந்தவர்களில், போலீசார் தடியடி நடத்தியதில் பாஜகவைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் பாஜகவைச்சேர்ந்த விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, பீகார் முதல்வர் நிதிஸ் குமாரை கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக தலைவர் ஜேபி நட்டா, போலீசார் நடத்திய தடியடி குறித்து நிதிஷ் குமாரின் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது அம்மாநில அரசின் தோல்வி மற்றும் திறமையின்மையின் விளைவு என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்