போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணாவுக்கு தடை.! அடுத்தடுத்த நாடாளுமன்ற அதிரடி உத்தரவுகள்…
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, மத செயல்பாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தான் நாடாளுமன்ற வளாகத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்த கூடாது என அறிவிப்பு வெளியானது. விரைவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள இந்த சூழலில் இந்த அறிவிப்பு கடும் பேசுபொருளானது.
அந்த விவாதங்கள் அடங்குவதற்குள், அடுத்ததாக , தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகியவை நடத்த என மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி டிஜெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுங்கட்சியில் செயல்பாடுகள் தவறாக தெரிந்தால் அந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகிய வழிகளில் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டுவர்.
ஆனால், தற்போது அது போன்ற செயல்களுக்கும், மத வழிபட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை என்ற சுற்றறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.