15 பேர் பலி! போலீசார் வீட்டிற்கு செல்ல தடை! போர்க்கலமாகிவரும் உ.பி!

- குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- இதில் உத்திரபிரதேசத்தில் போராட்டத்தில் 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் அசாம் தொடங்கி அடுத்து வடமாநிலங்களில் பரவி அடுத்து தென் மாநிலங்கள் என பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறி கலவரங்களாகி பொது சொத்துக்கள் சேதம், உயிரிழப்பு என கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த கலவரம் காரணமாக 24 மணிநேரமும் உத்திர பிரதேசத்தில் காவல்துறையினருக்கு வீட்டிற்கு செல்ல அனுமதியில்லை.
உத்திர பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தற்போது வரை 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. வாரணாசியில் 8 வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான் என்பது வருந்தத்தக்க செய்தியாகியுள்ளது. இந்த கலவரத்தில் 405 காலி நாட்டு துப்பாக்கி குப்பிகள் கிடைக்கப்பட்டுள்ளனவாம். இதில் சுமார் 705பேர் கைது செய்யப்பட்டனர். 125 எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. லக்னோ, கான்பூர், ராம்பூர், என பல இடங்களில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளான. லக்னோவில் நாளை வரை இன்டர்நெட்சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.