ரயில் பயணங்களை தவிர்த்து உங்களை பாதுகாத்திடுங்கள்! ரயில்வே துறை அறிவுறுத்தல்!
இந்தியாவில் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு இதனை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ரயில்வே துறை கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால் மக்கள் அனைவரும் பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பயணிகள் சிலர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால், மற்ற பயணிகளுக்கும் தொற்று பரவ அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே பயணத்தை தவிர்த்து, உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.