Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா அந்தாரேவை அழைத்துச் செல்வதற்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ராய்காட் மக்களவைத் தொகுதிக்கு மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது
இந்நிலையில், அவர் ஹெலிகாப்டர் மூலம் பிரசாரத்திற்கு செல்ல இருந்தார். இதற்காக, தற்காலிக ஹெலிபேடில் ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்தபோது, கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி படுகாயமடைந்த நிலையில், ஹெலிகாப்டர் கடும் சேதமடைந்துள்ளது.
காலை 9.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது, ஹெலிகாப்டர் நிலைதடுமாறி சாய்ந்ததில் விமானிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில், ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து, வளைந்து, தள்ளாடி கீழே விழுவது தெரிகிறது.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…