காலிப்பணியிடங்கள் அறிவித்த நாளில் இருந்து பதவிக்காலம் கணக்கிடப்படாது.! உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

Supreme court of India

டெல்லி: வேலைக்கான உத்தரவிட்ட தேதியில் இருந்து தான் பதவி உயர்வு கணக்கிடப்படுமே தவிர காலிப்பணியிடங்கள் அறிவித்த தேதியில் இருந்து பதவி உயர்வு கணக்கிடப்பட மாட்டாது. – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

பீகார் மாநிலம் மின்சார வாரியத்தில், கடந்த 1976ஆம் ஆண்டு ஒரு நபர் உதவியாளர் பணியில் சேர்க்கப்படுகிறார். அந்த நபர் மாற்றுதிறனாளி மற்றும் பட்டியலின இடஒதுக்கீட்டின் படி, அடுத்தடுத்த பதவி உயர்வுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மின்சார வாரியத்தால் பணியமர்த்தப்படுகிறார்.

அந்த சமயம் , அடுத்து 1991ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி, பல்வேறு வகை ஊழியர்களுக்கு ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு பதவி உயர்வு பெறுவதற்காக, பட்டியல்/பழங்குடியினர் மற்றும் பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு சிறப்பு சட்ட தீர்மானத்தை மாநில மின்சார வாரியம் நிறைவேற்றியது.

அதன் பிறகு, 1995இல், அந்த நபருக்கு துணைச் செயலாளர் பதவி சிறப்பு இடஒதுக்கீடு மூலம் விரைவான பதவி உயர்வு வழங்கப்பட்டது. அடுத்ததாக 8 ஆண்டுகள் கழித்து 2003, மார்ச் 5இல் இணைச் செயலர் பதவியும் விரைவாக வழங்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக, பீகார் மாநிலத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தனியாக பிரிந்ததால், டிசம்பர், 2003 இல், இணைச் செயலர் பதவிகளின் எண்ணிக்கையை 6ல் இருந்து 3 ஆகக் குறைக்க மின்சார வாரியம் தீர்மானம் நிறைவேற்றியது.

இதனிடையே, மார்ச் 5, 2003 இன் தனக்கு பதவி உயர்வு அளித்த மின்சாரத்துறை அறிவிப்ப்புக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை அந்த நபர் தாக்கல் செய்தார். அதில் , கடந்த 2003ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி இணைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றாலும், அந்தப் பதவி கடந்த ஜூலை 1997ஆம் ஆண்டு முதலே காலியாக இருந்தது. தான் அப்போதே அதற்கு சிறப்பு இடஒதுக்கீட்டின் படி தகுதி பெற்று இருந்தேன். அதனால், அந்த பதவி காலியாக இருந்த நாள் முதல் எனக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு கணக்கிடப்பட வேண்டும் என்று அந்த மனுவில் அந்த நபர் கூறினார். இந்த மனுவை தனி நீதிபதி அமர்வு நிராகரித்தார்.

அதன் பிறகு, அந்த நபர், பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது ஜூலை 29, 1997 முதல், அந்த நபருக்கு இணைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பு வழங்கப்படுவதற்குள் அந்த நபரின் பணிக்காலம் முடிந்துவிட்டதால், அவருக்கு அனைத்து சலுகைகளையும் வழங்குமாறு பீகார் மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டது.

பீகார், பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பீகார் மின்சார வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கானது நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கு விசாரணையின் போது, வேலை மற்றும் நியமனம் ஆகியவற்றில் சம வாய்ப்பின் ஒரு அம்சமாக பதவி உயர்விற்காக உரிமை பரிசீலிக்கப்படும். இது இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் 16(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். ஆனால் அதே நேரத்தில் பதவிக்கு அவசியமான தகுதியை பணியாளர் பெற வேண்டும். சிறப்பு இடஒதுக்கீடு அறிவித்த உடன் அதனை கொண்டு உயர்பதவிக்கு அந்த நபர் தகுதியுடையவர் என்பதை ஏற்க முடியாது என நீதிபதி அமர்வு கூறியது.

டிசம்பர் 26, 1991 தேதியிட்ட அரசு சிறப்பு இடஒதுக்கீடு தீர்மானத்தில், ஒரு பணியாளர் ஒரு பதவியில் இருந்து மற்றொரு பதிவிக்கு உயர்வு பெறுவதற்கு இடஒதுக்கீட்டை கருத்தில் கொள்வதற்கு முன், குறைந்தபட்ச தகுதி சேவையும் இருக்க வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால், பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு காலம் முடிந்தவுடன், ஒரு ஊழியர் அடுத்த உயர் பதவிக்கு தானாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியுடையவர், என்ற கூற்றை ஏற்க முடியாது.

இடஒதுக்கீடு , தகுதிகள் அடிப்படையில், 10 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களில், குறிப்பிட்ட நபருக்கு, பீகார் மின்சார வாரியத்தால் ஐந்து பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு இடஒதுக்கீடு தீர்மானம் என்பது பதவி உயர்வு பேர் ஓர் சிறப்பு உரிமை மட்டுமே. 2003ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதிக்குப் பதிலாக ஜூலை 29, 1997 இல் இருந்து பதவி உயர்வு கணக்கிடப்பட்டு பாட்னா உயர்நீதிமன்றம் கூறியதை சட்டப்பூர்வமாக கருத முடியாது. பணிக்கான உத்தரவிட்ட தேதியில் இருந்து தான் பதவி உயர்வு கணக்கிடப்படுமே தவிர காலிப்பணியிடங்கள் அறிவித்த தேதியில் இருந்து பதவி உயர்வு கணக்கிடப்பட மாட்டாது என்று கூறி நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்