ஹரியானாவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர், இலவச பைக், 20 ரூபாய்க்கு பெட்ரோல், 100 ரூபாய்க்கு சிலிண்டர், மேக்கப் கிட் என வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் ஒரு வேட்பாளர் கொடுத்த அதிரிபுதிரியான வாக்குறுதிகள் தான் தற்போது இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.
அரியானா மாநிலம், சிர்சாத் எனும் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஜெய்கரன் லத்வால் எனும் வேட்பாளர் தனது தேர்தல் வாக்குறுதி பட்டியலில் நம்பமுடியாத நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.
அதில், பெண்களுக்கு இலவச மேக்கப் கிட், குடும்பங்களுக்கு இலவச பைக், கிராமத்தில் இலவச வைஃபை, டெல்லி முதல் சிர்சாத் வரை மெட்ரோ ரயில், சிர்சாத்தில் இளைஞர்களுக்கு அரசு வேலை, ஹெலிகாப்டர் சேவைகள் என வாக்குறுதிகளை அள்ளிவிட்டுவிட்டார்.
மேலும், பெட்ரோல் லிட்டர் 20 ரூபாய்க்கும், சிலிண்டர் 1க்கு 200 ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவித்து வாக்காளர்களை மிரள வைத்துவிட்டார்.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…