“ப்ராஜெக்ட் டைகர்” 50-வது ஆண்டு! இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பெருமை; பிரதமர் மோடி.!

Default Image

புலிகள் திட்டம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பெருமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பெரிய பூனைகள் குடும்பத்தில் முன்னனியில் இருக்கும் புலிகள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ‘புலிகள் திட்டம்'(Project Tiger) கடந்த 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ‘ப்ராஜெக்ட் டைகர்’ தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குச் சென்று அதன் தொடக்க விழாவில் பங்கேற்றார்.

புலிகள் திட்டத்தின் 50 ஆண்டுகள் விழாவில் புலிகள் கணக்கெடுப்பின் சமீபத்திய தரவுகளை பிரதமர் மோடி வெளியிட்டார். 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் புலிகளின் எண்ணிக்கை 3,167 என்று பிரதமர் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, இயற்கையை பாதுகாப்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

புலிகள் திட்டத்தின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்திற்கே பெருமை அளிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நேரத்தில், உலக புலிகள் எண்ணிக்கையில் 75% சதவீதம் இந்தியாவில் உள்ளது என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.

ப்ராஜெக்ட் டைகர், இந்திய அரசால் 1 ஏப்ரல் 1973 அன்று அசாம், பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் தோராயமாக 14,000 சதுர கி.மீ. பரப்பளவில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில், இந்த திட்டம் 18,278 சதுர கிமீ பரப்பளவில் ஒன்பது புலிகள் காப்பகங்களை கொண்டிருந்தது. இப்போது, இப்பகுதியில் சுமார் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 53 புலிகள் காப்பகங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றன.

இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் மக்களுக்கு ஆண்டுதோறும் 45 லட்சத்துக்கும் அதிகமான, வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்று மூத்த வன அதிகாரி  தெரிவித்தார். மேலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுக்கள் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கும் அரசாங்கம் ஆதரவளிக்கிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்