5 புதிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு திட்ட வரைவு அறிக்கை- நிர்மலா சீதாராமன்..!

நாடு முழுவதும் 5 புதிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
- இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும்.
- எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- தொழில்நுட்ப ரீதியான வசதிகள் மற்றும் டிஜிட்டல் விஷயங்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- மேலும், ட்ரோன் மூலம் விவசாய நிலங்களை அளப்பது மற்றும் விளைச்சல்களை கணிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- நாடு முழுவதும் 5 புதிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
- அதில், கோதாவரி-கிருஷ்ணா, காவிரி- பெண்ணாறு திட்டங்களும் அடங்கும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025