“ப்ராஜெக்ட் சீட்டா” காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கியது – ஜெய்ராம்

Default Image

கடந்த கால அரசுகளின் சாதனைகளை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதே இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் குற்றசாட்டு.

கடந்த 1948-ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தில் இந்தியாவின் கடைசி சிறுத்தை இறந்தது. அதன் பின் நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை என 1952-இல் இந்தியாவில் சிறுத்தை இனம் அடியோடு அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் 74 ஆண்டுகளுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் சீட்டா வகை சிறுத்தை இனத்தை பெருக்க மத்திய அரசு, ஆப்பிரிக்கா நாடான நமீபியா உடன் இந்தாண்டு ஜூலை 20ல் ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன்படி, நமீபியா அரசு 5 பெண் மற்றும் 3 ஆண் என மொத்தம் 8 சிறுத்தைகளை நம் நாட்டுக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தது. இந்த சிறுத்தைகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், நாட்டில் சிறுத்தை இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுத்தை இனத்தை பெருக்கும் நோக்கில் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா வந்தடைந்தன.

நமீபியாவில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட சீட்டா வகை 8 சிறுத்தைகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி தனது பிறந்தநாளான இன்று விடுவித்தார். இந்த நிலையில், சிவிங்கி புலி கொண்டு வரும் திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கியது என்று அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ப்ராஜெக்ட் சீட்டா” 2010-ல் நான் தென்னாபிரிக்காவின் கேப்டவுனுக்கு சென்றபோது முன்னெடுத்த திட்டம். கடந்த கால அரசுகளின் சாதனைகளை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதே இல்லை என குற்றசாட்டியுள்ளார். நாட்டின் முக்கிய பிரச்னையை திசைதிருப்பவதிலேயே பிரதமர் மோடி முனைப்புடன் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்