விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களில் அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவு வந்தது. இந்த நிலையில், அதுபோன்று மற்றொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை டெல்லியில் போராட்டம் நடைபெறும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
20,000 விவசாயிகள் டெல்லியில் திரள திட்டம்… இன்று பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு!
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, களத்தில் குதிக்கவுள்ளனர். அதேபோல் ராஜஸ்தான், பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவிவசாயிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். மத்திய அரசை கண்டித்து டெல்லியில் போராட்டத்துக்காக சுமார் 20,000 விவசாயிகள் திரள திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, விவசாயிகள் சுமார் 2,500 டிராக்டர்களில் ஊர்வலமாக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லி நோக்கி வரும் விவசாயிகள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றன. சிங்கூர் எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் டெல்லி முழுவதும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. இந்த நிலையில், டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், தலைநகர் டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அடுத்த ஒரு மாதத்திற்கு டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…