புதுச்சேரியில் பேனர் வைக்க தடை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் பள்ளிக்கரணை அருகே திருமண நிகழ்ச்சிக்காக அதிமுக பிரமுகர் சார்பில் சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.அந்த சமயத்தில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதன் பின் அங்கு வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது.இந்த விபத்தில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.இதற்கு பல தரப்பு மக்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.சுபஸ்ரீ இறந்த செய்தியை கேட்டு மிகவும் மன வேதனையுற்றேன். தமிழகத்தை போலவே புதுவையிலும் பேனர் கலாச்சாரம் இருக்கிறது. இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க புதுவையில் அனுமதி இன்றி பேனர் வைப்பதற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…