அரசு ஊழியர்கள் யுடியூப் சேனல் தொடங்க தடை -கேரள அரசு அதிரடி உத்தரவு
கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று பலரும் யுடியூப் சேனல் தொடங்கி, சம்பாதித்து வருகின்றனர். இந்த யூடியூப் சேனல் மூலம் இன்று படிக்கும் மானவ்ரகள் முதல் முதியவர்கள் வரை பலரும் சம்பாதித்து வருகின்றனர்.
யுடியூப் சேனல் தொடங்க தடை
இந்த நிலையில், கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல் தொடங்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில உள்துறையில் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், ஒரு அரசு ஊழியர்கள் youtube சேனலை தொடங்குவது கேரள மாநில அரசின் தொழிலாளர் சட்டம் 1960 ன் படி விதிமீறல் ஆகும். தற்போது பின்பற்றப்படும் விதிகள் youtube சேனல் தொடங்குவதற்கு அனுமதிக்காது. நிதி ஆதாயம் பெறும் செயல் என்பதால் சட்டத்துக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது.