ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- ஜம்மு காஷ்மீரில் இணைய தள முடக்கத்தை திரும்ப பெறுவது தொடர்பாக பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
- தடை விதிக்கும் போது மக்களிடம் முறையாக தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு காஷ்மீரில் ஒரு சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.மேலும் அங்கு தொலைபேசி மற்றும் இணைய சேவையையும் ரத்து செய்தது மத்திய அரசு.எனவே மீண்டும் சேவைகளை வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கினை நீதிபதி என்.வி. ரமணா அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்பொழுது, ஜம்மு காஷ்மீரில் இணைய தள முடக்கத்தை திரும்ப பெறுவது தொடர்பாக 7 நாளில் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இணைய தளத்தின் மூலம் கருத்து தெரிவிப்பது என்பது அரசியல் சாசன பிரிவு 19 கீழ் வரும் அடிப்படை சுதந்திரம் ஆகும். அதற்கு தடை விதிக்கும் போது மக்களிடம் முறையாக தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.