8 அடி உயர மனிதர் உயரத்தால் எதிர்க்கொள்ளும் சிக்கல்கள்.!

Published by
Ragi

இந்தியாவின் மிக உயரமான மனிதனான தர்மேந்திர பிரதாப் எதிர்க்கொள்ளும் சிக்கல்களை கூறியுள்ளார்.

இந்தியாவின் மிக உயரமான மனிதர் என்ற கன்னஸ் சாதனையை படைத்தவர் தர்மேந்திர பிரதாப் சிங்.  உத்திரப்பிரதேசம் மாநிலம் நர்ஹார்பூர் காசியாஹி கிராமத்தை சேர்ந்த தர்மேந்திர 8 அடி இரண்டு அங்குலம் உயரம் கொண்டவர். இந்த உயரம் வரம் இல்லை சாபம் என்று கூறுகிறார்.

45 வயதான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை . இதுகுறித்து தர்மேந்திர பிரதாப் சிங் கூறுகையில், பெண்கள் தன்னுடைய உயரத்தை பார்த்து திருமணம் செய்ய மறுப்பதாகவும் ,  ஆண்டுகள் செல்ல செல்ல ஒரு வாழ்க்கை துணையின் தேவையை உணருவதாக சோகத்துடன் கூறுகிறார்.

மேலும், முதுகலை பட்டம் வென்ற இவருடன் மக்கள் செல்ஃபி எடுத்து பணத்தையும், பரிசுகளையும் கொடுப்பார்கள் என்றும், டெல்லியில் உள்ள கொனாட் பிளேஸ் மற்றும் மும்பையின் கேட் வே ஆஃப் இந்தியாவிற்கு செல்கையில் அங்குள்ள சுற்றுலா பயணிகள் தன்னை பார்த்து ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து விட்டு பணம் கொடுப்பார்கள்.

தற்போது, கொரோனா ஊரடங்கால் செல்ல முடியவில்லை என்றும், அதனால் வருமானம் நின்று விட்டதாகவும் கூறிய தர்மேந்திர, எனது உயரம் காரணமாக என்னால் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு உள்ளே செல்ல முடியாது. எனது உயரத்திற்கு ஏற்ற ஒரு வேலையோ அல்லது நிதியுதவி அளித்தோ உதவுமாறு உத்திரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவர், கடந்தாண்டு மூட்டுவலி காரணமாக நடப்பதில் சிரமம் ஏற்பட்டதால் இருதரப்பு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அகமதாபாத் மருத்துவமனையில் செய்த போது, உயரம் காரணமாக மருத்துவமனையில் அவரது படுக்கை முதல் ஆபிரேஷன் தியேட்டர் டேபிள் வரை அனைத்துமே சென்னையில் இருந்து விஷேசமாக ஆர்டர் செய்து வரவலைப்பட்டதாம்.

Recent Posts

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

53 minutes ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

1 hour ago

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

2 hours ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

2 hours ago

தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…

3 hours ago

இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…

3 hours ago