8 அடி உயர மனிதர் உயரத்தால் எதிர்க்கொள்ளும் சிக்கல்கள்.!
இந்தியாவின் மிக உயரமான மனிதனான தர்மேந்திர பிரதாப் எதிர்க்கொள்ளும் சிக்கல்களை கூறியுள்ளார்.
இந்தியாவின் மிக உயரமான மனிதர் என்ற கன்னஸ் சாதனையை படைத்தவர் தர்மேந்திர பிரதாப் சிங். உத்திரப்பிரதேசம் மாநிலம் நர்ஹார்பூர் காசியாஹி கிராமத்தை சேர்ந்த தர்மேந்திர 8 அடி இரண்டு அங்குலம் உயரம் கொண்டவர். இந்த உயரம் வரம் இல்லை சாபம் என்று கூறுகிறார்.
45 வயதான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை . இதுகுறித்து தர்மேந்திர பிரதாப் சிங் கூறுகையில், பெண்கள் தன்னுடைய உயரத்தை பார்த்து திருமணம் செய்ய மறுப்பதாகவும் , ஆண்டுகள் செல்ல செல்ல ஒரு வாழ்க்கை துணையின் தேவையை உணருவதாக சோகத்துடன் கூறுகிறார்.
மேலும், முதுகலை பட்டம் வென்ற இவருடன் மக்கள் செல்ஃபி எடுத்து பணத்தையும், பரிசுகளையும் கொடுப்பார்கள் என்றும், டெல்லியில் உள்ள கொனாட் பிளேஸ் மற்றும் மும்பையின் கேட் வே ஆஃப் இந்தியாவிற்கு செல்கையில் அங்குள்ள சுற்றுலா பயணிகள் தன்னை பார்த்து ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து விட்டு பணம் கொடுப்பார்கள்.
தற்போது, கொரோனா ஊரடங்கால் செல்ல முடியவில்லை என்றும், அதனால் வருமானம் நின்று விட்டதாகவும் கூறிய தர்மேந்திர, எனது உயரம் காரணமாக என்னால் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு உள்ளே செல்ல முடியாது. எனது உயரத்திற்கு ஏற்ற ஒரு வேலையோ அல்லது நிதியுதவி அளித்தோ உதவுமாறு உத்திரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவர், கடந்தாண்டு மூட்டுவலி காரணமாக நடப்பதில் சிரமம் ஏற்பட்டதால் இருதரப்பு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அகமதாபாத் மருத்துவமனையில் செய்த போது, உயரம் காரணமாக மருத்துவமனையில் அவரது படுக்கை முதல் ஆபிரேஷன் தியேட்டர் டேபிள் வரை அனைத்துமே சென்னையில் இருந்து விஷேசமாக ஆர்டர் செய்து வரவலைப்பட்டதாம்.