இந்தியர்களை மீட்பதில் சிக்கல்… பாதியில் திரும்பிய இந்திய விமானம் ..!

Published by
murugan

உக்ரைன் சென்ற ஏர் இந்திய விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது. 

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ள நேட்டோ என்ற 12 நாடுகளை ஒருங்கிணைத்த கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா தீவிரம் காட்டி வந்தது. ரஷ்யா தனது படைகளை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்தது. இதற்கிடையில், உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சிறப்பு விமானம் இந்தியாவில் இருந்து இயக்கப்பட்டது. இன்று உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி விட்டது. இந்நிலையில், போர் நடைபெற்று வருவதால் உக்ரைன் சென்ற ஏர் இந்திய விமானம் நடுவானில் தவித்த நிலையில் மீண்டும் விமானம் டெல்லி திரும்பியது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்திய விமானம் , போர் தொடங்கியதால் மீண்டும் திரும்பியது. டெல்லிக்கு மீண்டும் விமானம் திரும்பியதால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!

LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!

சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…

40 minutes ago

தேசிய கீதம் இசைக்கும் போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலால் சர்ச்சை.! வைரலாகும் வீடியோ…

பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…

1 hour ago

பிரபல ரவுடி தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியில் சுட்டுப்பிடிப்பு.!

சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த…

2 hours ago

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தார் பினராயி விஜயன்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு…

2 hours ago

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

14 hours ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

15 hours ago