இந்தியர்களை மீட்பதில் சிக்கல்… பாதியில் திரும்பிய இந்திய விமானம் ..!
உக்ரைன் சென்ற ஏர் இந்திய விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ள நேட்டோ என்ற 12 நாடுகளை ஒருங்கிணைத்த கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா தீவிரம் காட்டி வந்தது. ரஷ்யா தனது படைகளை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்தது. இதற்கிடையில், உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சிறப்பு விமானம் இந்தியாவில் இருந்து இயக்கப்பட்டது. இன்று உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி விட்டது. இந்நிலையில், போர் நடைபெற்று வருவதால் உக்ரைன் சென்ற ஏர் இந்திய விமானம் நடுவானில் தவித்த நிலையில் மீண்டும் விமானம் டெல்லி திரும்பியது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்திய விமானம் , போர் தொடங்கியதால் மீண்டும் திரும்பியது. டெல்லிக்கு மீண்டும் விமானம் திரும்பியதால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.