பதக்கம் வென்ற வீரர்களுக்கு லட்ச லட்சமாய் பரிசுத்தொகை.! மத்திய அமைச்சர் அறிவிப்பு.!
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் சீனாவில் காங்சூ நகரில் 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள விளையாட்டு போட்டிகள் மற்றும் அதனை தொடர்ந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகியவை நடைபெற்று முடிந்தன.
இதில், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று இருந்தனர் . கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய வீரர்கள் வென்ற 76 பதக்கங்களை விட கூடுதல் பதக்கங்களை வென்றனர்.
அதே போல, 4வது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்று வீரர்கள்சாதனை புரிந்தனர். முன்னதாக 2018ஆம் ஆண்டு பெற்ற 72 பதக்கங்கள் தான் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிட தக்கது.
ReadMore – ரஷ்ய படையில் இந்தியர்கள்… போரில் இருந்து விலகி இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
இவ்வாறு கடந்த முறை பெற்ற பதக்கங்களை விட இந்தாண்டு ஆசிய போட்டிகளில் இந்திய வீர்கள் 200க்கும் அதிகமான பதக்கங்களை வென்று சாதனை புரிந்தனர். இதனை பாராட்டும் விதமாக பதக்கங்கள் வென்ற மத்திய பாதுக்காப்பு படையில் பல்வேறு பணிகளில் பணிபுரியும் வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க மத்திய பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது .
அதன்படி, 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற மத்திய பாதுகாப்பது படையில் பணிபுரிந்து வரும் வீரர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், வெள்ளி வென்ற வீரர்களுக்கு 15 லட்சம் ரூபாய் பரிசு தொகையும், வெண்கல பதக்கம் வென்ற வீரர்களுக்கு 10 லட்ச ரூபாயும் வழங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.