பிரியங்கா அரசியல் வருகை…..காங்கிரஸ் உற்சாகம்…!!
பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி உற்சாகமடைந்து ஆந்திரா, மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட பரிசீலனை செய்து வருவதாக செய்தி வந்துள்ளது .
அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள. குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கெதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார் .
ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் , மாயாவதி இரண்டும் கூட்டணி இணைததையடுத்து காங்கிரஸ் கட்சி உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டத்தையடுத்து மேற்கு வங்கத்தில் தன்னுடைய பலத்தை தனித்து காண்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.மேலும் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பலன்தராது என்று காங்கிரஸ் கட்சி கூறுவதாக கருதுகின்றது.