இப்போது என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும்..! பிரியங்கா தந்தை..!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக முகமது , சிவா , நவீன் , சின்னகேஷ்வலு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பிரியங்கா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு குற்றவாளி நான்கு பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது குற்றவாளிகள் நான்கு பெரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பிய முயன்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததற்கு மக்கள் பலர் தெலுங்கானா போலீசாரை பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் பிரியங்கா தந்தை ANI-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் , எனது மகள் இறந்து 10 நாட்கள் ஆகின்றன. என்கவுண்டரில் நான்கு பேரை கொல்லப்பட்டது எனக்கு நிம்மதியை தருகிறது.அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. இப்போது என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும் என கூறினார்.
என் மகள் அனுபவித்த வேதனைக்கு பதில் கிடைத்துள்ளது. இது மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கட்டும். தெலுங்கானா போலீஸ் வேகமாக செயல்பட்டு உள்ளது.போலீசாருக்கு மிக்க நன்றி. இந்த கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மீடியாதான்.
மீடியா அவர்களால் தான் இந்தியா முழுவதும் இந்த கொலை சம்பவத்தை கொண்டு சென்றனர். எனவே மீடியா அவர்களுக்கு மிக்க நன்றி என பிரியங்கா தந்தை கூறியுள்ளார்.