டெல்லி : ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, ராகுல் காந்த மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர்.
ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறிப்பாக, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான பண்டிகை. ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) என்பது சகோதரர் மற்றும் சகோதரி இடையே உள்ள அன்பையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது.
இந்த பண்டிகையின் போது, சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ‘ராகி’ என்று அழைக்கப்படும் ஒரு கயிற்றை கட்டி, அன்பை வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு, தனது வாழ்த்துகளை சமூக வலைதளமான X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ” ரக்ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் – தங்கைக்கு இடையே உள்ள அழியாத அன்பு மற்றும் பாசத்தின் அடையாளம் இந்த பண்டிகை. இந்த பாதுகாப்பு கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுவாக வைத்திருக்கட்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில், அவர் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து, பிரியங்கா காந்தியும் தனது எக்ஸ் தள பக்கத்தில் ராகுல் காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “அண்ணனுக்கும் – தங்கைக்கும் இடையிலான வானது ஒரு பூச்செடி போன்றது. அதில் வெவ்வேறு வண்ணங்களில் நினைவுகளும், ஒற்றுமையின் கதைகளும், நட்பும் நிறைந்திருக்கும். அது ஆழமாக்கும் வகையில், அன்பு மற்றும் மனசு விட்டு புரிதலோடு செழித்து வளரும். உங்கள் அனைவருக்கும் இனிய ராக்கி நல்வாழ்த்துக்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஒருவருக்கொருவர் தங்களது அண்ணன் தங்கை பாசத்தை பகிர்ந்து கொண்டனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…